இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அபிவிருத்தி செயலனி ஒன்றை அமைத்து கிராம அரசு மற்றும் நகர அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெஹியத்த கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
