சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணை வழங்கக்கூடிய கைதிகள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பிணை வழங்கப்பட்டபோதிலும், பணத்தை செலுத்த முடியாது சில கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இதன் காரணமாக, சிறைச்சாலைகளில் கடும் நெருக்கடி நிலவுகின்றது. அவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
