நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயல்த்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எடின்பெரோ சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இவ்விருது விழாவை அமுல்படுத்தி வருகின்றது. தற்போது இவ்விருது உலகின் 44 ;நாடுகளில் வழங்கப்படுகின்றது.
1980 ஆம் ஆண்டு அப்போதைய இளைஞர் விவகாரம் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக பதவி வகித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை இளைஞர்களுக்காக இவ்விருது வழங்கும் விழாவினை அமுல்படுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
