கொரோனாவுக்கு எதிரான சகல தடுப்பூசிகளும் ஒரே விதத்தில் பாதுகாப்பளிக்கப்படுவதனால் தடுப்பூசியின் ஏதேனும் ஒரு டோசை பெற்றுக் கொள்வதன் மூலம் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியுமென சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
“நாடு மீண்டும் திறக்கப்பட்டவுடன் ஆரம்ப கட்டத்திற்கு சென்றால் ஒரு போதும் இப்பிரச்சினைக்கு முடிவு காண கிடைக்காது. இதனால் நாட்டை எதிர்வரும் திங்கட் கிழமை திறந்தால் சமூக மற்றும் பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்கும் போது குறித்த பொறுப்பாளர்களினால் அதற்குரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு அவை பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தால் அது குறித்து திருப்தியடைய முடியும். இவ்வாறு இல்லாவிட்டால் நாட்டை திறப்பதில் சிக்கல் நிலை காணப்படும். அதேபோன்று நாட்டை திறப்பதற்கான தீர்மானங்களை எடுப்பதில் இது தாக்கம் செலுத்த கூடும். எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் நாட்டை திறந்தால் முன்னெடுக்கப்படவுள்ள சமூக மற்றும் பொருளாதார செயல்பாடுகளினால் இவ்வைரஸ் பரவாதிருப்பதற்கான விதிமுறைகளை அந்தந்த நிறுவன பொறுப்பாளர்கள் முன்னெடுக்க வேண்டும். இவ்வைரஸ் பரவாத வண்ணம் செயல்பாடுகளை முன்னெடுப்பதே எமது தேவையாகும். அவ்வாறு இன்றி நாட்டை தொடர்ந்தும் முடக்க முடியாது. தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை விட வேறு வழிகள் காணப்படுவதாயின் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.”
