வட மாகாணத்தில் மீண்டும் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுடன், போதையற்ற மாகாணமாக வடக்கை மாற்றுவதே தனது இலக்கு என மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
யாழ். உஸ்மானியா கல்லூரியின் இவ்வாண்டுக்கான கால்கோள் விழா கல்லூரி அதிபர் எம்.சேதுராஜூது தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். முஸ்லிம் பெருமக்களினால் ஆளுநருக்கு சிறந்த வரவேற்பு வழங்கப்பட்டது. அத்துடன் பாடசாலையில் இவ்வருடம் இணைந்து கொண்ட முதலாம் தரம் மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினால் வரவேற்பளிக்கப்பட்டதுடன், பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ். பிரதேச செயலாளர் ரி.தயாநந்தா, யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் எம்.நிலாம், எம்.எம்.எம். நிபாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
