கொழும்பு புறக்கோட்டையில் பதின்மூன்று 5 ஆயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பேரில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பஸ் நடத்துனர் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாவை மாற்றி தருமாறு சந்தேக நபர் தெரிவித்துள்ளார். நடத்துனருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து அவர் இவ்விடயத்தை பொலிஸாருக்குஅ றிவித்துள்ளார். உடனடியாக ஸ்தலத்திற்கு வருகை தந்த பொலிஸார் 13 போலி 5 ஆயிரம் நோட்டுக்களுடன் சந்தேக நபரை கைது செய்தனர். 39 வயதான குறித்த நபர் அம்பாறை பகுதியை சேர்ந்தவராவார்.
