அநுராதபுரம் ஜேதவனாராமயவுக்கு அருகில் உள்ள முதியோர் மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த தீ விபத்தில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த பஸ் பலாங்கொடையில் இருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரைக்காக வருகைத் தந்த நிலையிலேயே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
