நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.
எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.
கடற்பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 – 60 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும்.
புத்தளத்திலிருந்து மன்னார், கங்கசந்தூறை ஊடாக திருகோணமலை வரையான மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கும்.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து திருகோணமலை வரையான மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவுக் கொந்தளிப்பாக இருக்கும்.
காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
