மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நோய் உகாண்டா, லைபீரியா போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
கொங்கோவில் இதுவரை 2,473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 999 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொங்கோவுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
வாந்தி, இரத்தம் போன்ற உடல் திரவங்கள் வழியாக எளிதில் பரவக்கூடிய இந்நோய், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மிகக் கொடிய நோய்களில் ஒன்றாகும்.
