fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 12:37

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 2 ஆயிரத்து 188 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆசிரியர் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் முன்வைத்த கோரிக்கைக்கமைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படுமெனவும் அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தனது அமைச்சின் கீழ் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க