குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் தேசபந்து தென்னகோனை கைது செய்தனர்.
மே 9, 2022 அன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை சமர்ப்பித்திருந்தார், அதை நீதிமன்றம் நிராகரித்தது.
