சுவசெரிய இலவச எம்பியூலென்ஸ் சேவையை வெற்றிகரமாக முன்னெடுக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 100 உப அலுவலகங்கள் உருவாக்கப்படுமென அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மேலும் 197 உப அலுவலகங்கள் உருவாக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சுவசெரிய வேலைத்திட்டம் அரசியல் திட்டமல்ல. அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிகச்சிறந்த சேவையாக சுவசெரிய சேவை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பொன்றில் 97 வீதமான மக்கள் சுவசெரிய சேவையை குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் எந்தவொரு பகுதியிலும் சுவசெரிய எம்பியூலென்ஸ் சேவையை இலவசமாக பெறமுடியும்.
1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் சேவையை பெறமுடியுமென அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 297 எம்பியூலென்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவை நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தரித்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.