நாடு முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட 20 யானைகளுக்கு வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர் சிகிச்சை அளித்து வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சை பெறும் காட்டு யானைகளில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூடு மற்றும் பொறியில் சிக்கியதால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அதன்படி, அனுராதபுர வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகள், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகள், வயம்ப வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகள் மற்றும் ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகள் இத்தகைய சிகிச்சையைப் பெறுகின்றன.
இதற்கிடையில், திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்குத் துறை இயக்குநர் ஜெனரல் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார்.
விலங்கு நல சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வணக்கத்திற்குரிய பகோடா ஜனிதவன்ச தேரர் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு காட்டு யானைகளைக் கொல்வதாகக் கூறினார்.
