குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் யாழ் கொக்குவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் 3ம் திகதி கொக்குவில் ஞானபண்டித பாடசாலைக்கு அண்மையில் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கென பயன்படுத்தி வந்த ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார். கைப்பற்;றியுள்ளனர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
