புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பெண் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த பெண் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் 70 வயதான பெண்ணென தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான நபர் அனுமதிப்பத்திரமின்றி குறித்த பாரவூர்தியை செலுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி
படிக்க 0 நிமிடங்கள்