19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை யு-19 அணி 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லக்வின் அபேசிங்கே 69, ஷாருஜன் சண்முகநாதன் 42 ரன்கள் சேர்த்தனர். இந்தியா அணி சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். கிரண், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 21.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
துபாயில் நாளை (8) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – பங்களதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பங்களதேஷ் அணி அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
