வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மன்னார் பொலிசாரினால் இன்றைய தினம் வைத்தியர் அர்ச்சுனா கைதுசெய்யப்பட்டார்.
அவர் மன்னார் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டார். மன்னார் வைத்தியர்களின் சேவைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் நேற்று இரவு வைத்தியசாலைக்குள் செயற்ப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
