சிலாபம் – கொழும்பு வீதியின் மாதம்பே, கலஹிட்டியா பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் பயணிகள் பஸ் ஒன்று மோதியுள்ளது. இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமென தெரியவந்துள்ளது. தேவாலய சந்தியிலிருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி வேக கட்டுப்பாட் இழந்து புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியில் மோதியுள்ளது.
விபத்தில் பஸ் வண்டிக்கு பாரிய சேதம் ஏற்ப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் மழையுடன் கூடிய வானிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
