தாயின் வயிற்றியிலிருந்த 15 கிலோ எடைகொண்ட கட்டியொன்று சத்திரசிகிச்சை ஊடாக வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகளிர் மருத்துவ விசேட நிபுணர் வைத்தியர் சமந்த சரவிக்ரமவின் தலைமையில் இந்த சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது. வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயின் வயிற்றில் 15 கிலோ எடைகொண்ட கட்டியொன்று இருந்துள்ளது.
இந்த சத்திரசிகிச்சை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த தாய் உடல்நலத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக கட்டி வயிற்றில் இருந்துள்ளதுடன் அது வளர்ச்சியடைந்து வந்துள்ளது. உடலை அசைக்க முடியாதளவிற்கு கட்டியின் எடை அதிகரித்ததால் குறித்த தாய் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென வந்துள்ளார்.
இந்த நோய் நிலைமை Fibroid என அழைக்கப்படுகிறது.
