ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக செக்கனுக்கு ஆயிரத்து 200 கன அடி நீர் வெளியேறுகிறது. அங்கமுவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் 19 அடியாக உயர்வடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதிக மழையால் கண்டி – தெல்தெனிய வெடருவ பிரதான வீதியின் துணுவில பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வாகனப் போக்குவரத்திற்கு முற்றிலும் தடை ஏற்பட்டுள்ளது.
