பண்டாரவெல பூனாகலை, கபரகல பகுதியில் பாரிய மண்மேடொன்று குடியிருப்பு பகுதியில் சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்சரிவில் காயமடைந்தவர்கள் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த அனர்த்தத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை.பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்காலிகமாக பூனாகலை இலக்கம் 03 தமிழ் வித்தியாலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
