கடவத்தை பகுதியில் இருவர் சுட்டுக்கொலை
Related Articles
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடவத்தை பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பேலியகொடை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 2 குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே இந்த சம்பவம் பதிவாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.