வட மாகாணத்தில் சுகாதாரம் முதல் கல்வி துறை வரை சகல துறைகளிலும் மக்களுக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். மீனவர்கள் விவசாயிகள் உள்ளிட்ட சகல தொழில் துறையாளர்களுக்கும் தொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வசந்தம் ரிவியின் தீர்வு அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
