உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சிலர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலம் முன்னாள் ஜனாதிபதியிடம் பதிவு செய்யப்படவுள்ளது. வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள தனது வீட்டிற்கு வருகைதருமாறு ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்கமைய, கொழும்பு – வெஜட் வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் மூவர் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
