போதை பொருளுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரியொருவரும் வங்கி அதிகாரியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருளுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வு கூட ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அத்துருகிரிய மொராட்டுவஹேன பிரதேசத்தில் வைத்து அவரிடமிருந்து 18 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரியொருவரிடமிருந்து பல்வேறு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மாத்தறை தெவுந்தர பிரதேச சந்தேக நபர் தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகின்றார். அசிஸ் போதை மாத்தறைகள், ஹெரோயின் கஞ்சா உள்ளி;ட்ட பல்வேறு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
