பதுளை – மடுல்சீமை கெரடியெல்லயில் குளிக்கச்சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள் உட்பட மற்றுமொரு சிறுமியொருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் 38, 12 மற்றும் 13 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீர் நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதுளையில் சோகம் : நீராட சென்ற மூவர் பலி
படிக்க 0 நிமிடங்கள்