பல இலட்சம் ரூபா பெறுமதியான கஜ முத்துக்களை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடி வீட்டு வீதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு முன்னெடுத்தத சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதாகினர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5 கஜமுத்துக்கள் , 7 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டதோடு அவர்கள் பயணித்த டொல்பின் ரக வேனொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் கந்தளாய், கிண்ணியாக ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஜ முத்துக்களை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்