சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதனுடன் தொடர்புடைய வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழை அரச வைத்தியசாலையூடாக விநியோகிக்கும் நடவடிக்கையை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சேவை வழங்கும் போது மோசடிகள் இடம்பெறுவதை தடுப்பதற்கும் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
