மேலதிக வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு தொழில் ரீதியான வரவேற்பை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான புதிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கப்போவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலதி வகுப்பு ஆசிரியர்களுடனான சினேக பூர்வ சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பத்தரமுல்லை, வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/L6bJifWYfLo”]
இதேவேளை சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை மலே சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளவத்தையில் நேற்றிரவு இடம்பெற்றது. துன்யா மலாஹி துன்யா இஸ்லம் சங்கம் இதனை ஒழுங்கு செய்திருந்தது. இதன் தலைவர் தான் ஸ்ரீ அலிபின் அலி றுஷ்தான் உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
