உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை 0

🕔12:24, 1.ஜூலை 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து அவர்கள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 7 தினங்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின்

Read Full Article
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைது 0

🕔11:53, 1.ஜூலை 2019

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். க்ரேண்ட்பாஸ் பகுதியில் அவர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. கொழும்பை வசிப்பிடமாக கொண்ட 21, 31 மற்றும் 42 வயதுகளையுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம்

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம் 0

🕔11:15, 1.ஜூலை 2019

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பமாகிறது. ‘மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் அரச கரும மொழிகள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும

Read Full Article
சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் 0

🕔11:01, 1.ஜூலை 2019

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் தலைநகர் கார்ட்டோமில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் ஏற்ப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற மோதல்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு

Read Full Article
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு 0

🕔11:00, 1.ஜூலை 2019

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் , எந்த நேரத்திலும் தூக்கிலுடும் பணியை நிறைவேற்ற அவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட 26 விண்ணப்பதாரிகளின் புள்ளிவிபரங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, பொருத்தமான இருவர்

Read Full Article
சீரான வானிலை

சீரான வானிலை 0

🕔10:57, 1.ஜூலை 2019

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் 0

🕔10:54, 1.ஜூலை 2019

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதன்போது போதைப்பொருள் பாவனை பரவல் தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பொலிசார் இணைந்து அறிக்கையை தயாரித்துள்ளன. போதையற்ற

Read Full Article
போலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது

போலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது 0

🕔10:52, 1.ஜூலை 2019

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் போலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து போலிக் கடன் அட்டைகளை தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரமும், போலி கடன் அட்டைகளும், மடிக் கணிணி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு 0

🕔10:52, 1.ஜூலை 2019

எல்பிட்டிய – அநுருத்தகம பகுதியில், துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அநுருத்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும்ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று முதல்அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும்ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று முதல்அதிகரிப்பு 0

🕔10:49, 1.ஜூலை 2019

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் முப்படையினரின் கொடுப்பனவு என்பன இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட 7 ஆயிரத்து 800 ரூபா

Read Full Article

Default