fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும்ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று முதல்அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 10:49

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும்ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று முதல்அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் முப்படையினரின் கொடுப்பனவு என்பன இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இதுவரை வழங்கப்பட்ட 7 ஆயிரத்து 800 ரூபா வாழ்க்கை செலவு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் முப்படையின் அதிகாரிகளுக்கும் அதன் இணை அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவை உயர்த்தும் மற்றுமொரு நடவடிக்கையும் இன்று முதல் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக முப்படையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவை இருமடங்காக அதிகரிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இராணுவம், கடற்படை மற்றும் விமான சேவையின் அதிகாரிகளின் கொமாண்டோக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவும் ஆயிரம் ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கென ஆயிரத்து 175 மில்லியன் ரூபா அரசாங்கத்தால் செலவிடப்பட்டுள்ளது. இதேவேளை ஓய்வூதியகாரர்களின் கொடுப்பனவு முரண்பாடை நீக்கும் நடவடிக்கை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2015 டிசம்பர் 31 ம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்ற 5 இலட்சம் பேரின் ஓய்வூதிய கொடுப்பனவு 2 ஆயிரத்து 800 ரூபா மூதல் 20 ஆயிரம் ரூபா வரை பல்வேறு அளவுகளில் அதிகரிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க