விளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழப்பு 0
விளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் ஒருவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் கம்பஹா, சப்புகஸ்கந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீர் மயக்கமுற்கு கீழே வீழ்ந்துள்ளான். இதனையடுத்து மாணவனை கிரிபத்கொடையில் உள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வேளையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.