fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 11:15

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம்

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பமாகிறது. ‘மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் அரச கரும மொழிகள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு இதனை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வுக்கு ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

இதேவேளை ‘இரு மொழிகளைக் கற்போம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வு கொழும்பு இசிப்பதான கல்லூரில் பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க