நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் தொடர்புடைய வழக்குகள் நிறைவடைந்த நிலையில் அவற்றை அழிக்கும் செயற்பாடு வனாத்தவில்லு தகன ஆலையில் இடம்பெறுகிறது.
இந்நிலையில் மாரவில நீதிமன்றத்தில் நிறைவடைந்த 99 கிலோ 478 கிராம் ஹெரோயின் போதைப்பொருடன் தொடர்புடைய வழக்கு விசாரணையின் பின்னர் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கை மாரவில நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
