நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், அதற்கு ஆதரவாக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்ற அமைச்சர் தவறியதாகக் குற்றம் சாட்டியே எதிர்க்கட்சியினர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்திருந்தனர்.
