முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) கொழும்பு கோட்டை நீதவான் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.
சீன தேசியவாதி ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா (ரூ. 2 கோடி) பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
