அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை, 09.04.2026 வியாழக்கிழமை காலை 08 மணி முதல் 48 மணிநேரத்திற்கு நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக, சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
