அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களில் பயணிகளினால் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயப்படுத்தி மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தயாரிகக்ப்பட்ட உத்தரவினை பாராளுமன்ற அனுமதிக்கென முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பதில் போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திய அமைச்சரினால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதிவேக வீதியில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டங்களில் சில திருத்தப்பட்டுள்ளன. இதற்கமைய அதிவேக வீதியில் வாகனங்களில் பயணிப்போர் ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
