சிலியிலுள்ள மிக நீளமான அட்டகாமா பாலைவனம் ஏன்ட்ஸ் மலைகள் மற்றும் பசுபிக் சமுத்திரத்திற்கிடையில் அமையப்பெற்றுள்ளது. இரவு வானை தெளிவாக பார்ப்பதற்கு பூமியிலுள்ள தெளிவான இடங்களில் சிறந்த இடமாக இந்த பாலைவனம் அடையாளப்படுத்தப்படுகிறது.
அத்துடன் உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியின் இருப்பிடமாகவும் அட்டகாமா பாலைவனம் உள்ளது. பாலைவனம் மிகவும் வரட்சி நிறைந்த இடமாகும். இருப்பினும் அரிய சம்பவங்கள் ஊடாக இவ்வாறான பாலைவனத்தில் பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் மலர்கின்றன.
தென் துருவத்தின் குளிர்கால மாதங்களில் நிலவும் முக்கியமான பருவப்பெயர்ச்சியின் போது குறித்த பாலைவனத்தில் மழை பெய்யும். சில வருடங்கள் கடந்தே இவ்வாறான காலநிலை மாற்றம் பாலைவனத்தில் பதிவாகும். குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பாலைவனத்தின் நிலங்களை தொட்டதும் அங்கு வசந்தகாலம் வர ஆரம்பித்து விடும்.
அட்டகாமா பாலைவரும் ஒவ்வொரு வருடமும் 15 மில்லி மீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியையே பெறும். எனினும் ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 12 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும்.
ஒரே நாளில் இந்த மழைவீழ்ச்சி பதிவாகும். அட்டகாமா பாலைவனத்தில் தற்போது பூத்துள்ள பூக்கள் 200க்கும் அதிகமான வௌ;வேறு காட்டுப் பூக்கள் இனங்களைக் கொண்டவை.
இவற்றில் சிலது உலகின் வேறு எந்த இடத்திலும் காண முடியாதவை. ஓகஸ்ட் மாதத்தின் இறுதியிலும் நவம்பர் மாதத்திலும் இதுபோன்ற அரிய நிகழ்வுகள் இடம்பெறும். தற்போது அட்டகாமா பாலைவனத்தில் வசந்தகாலம் வந்துள்ளதைப் போன்று இதற்கு முன்னர் 2024ம் ஆண்டும் நிகழ்ந்தது.
