ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்புக்கமைய , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அங்கு தங்கவுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜேர்மனியின் ஜனாதிபதி, கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல், பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்தும் ஜனாதிபதி ஆலோசிக்கவுள்ளார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் குழுவும் கலந்துக்கொள்ள உள்ளனர்.
