நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பிரதான நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
24 நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் 6 நீர்த்தேக்கங்கள் உட்பட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் 6 நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன.
அத்துடன் அநுராதபுரத்தின் 4 நீர்த்தேக்கங்கள், பதுளை, குருநாகல், மொனராகலை, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள தலா இரு நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
