உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் பயன்பாட்டிற்கு உட்பட்ட வீடியோ தொடர்பாடல் செயலியான ஸ்கைப் சேவையை மே மாதத்திலிருந்து நிறுத்துவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மே மாதம் முதல் சேவையை முற்றாக நிறுத்தவுள்ளதாக குறித்த நிறுவனம் தமது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. 2003ம் ஆண்டு முதற்தடவையாக ஸ்கைப் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2011ம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் ஸ்கைப் வசதி 8.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட காலம் ஸ்கைப் செயலி உலக மக்கள் மத்தியல் மிகவும் பிரபல்யம்வாய்ந்த தொடர்பாடல் தொழில்நுட்பமாக காணப்பட்டது.
