பரீட்சை திணைக்களத்தை எதிர்காலத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சைகளுக்கு பொறுப்பாக ஒரு பிரிவும் ஏனைய பரீட்சைகளுக்கு பொறுப்பாக மற்றொரு பிரிவும் இயங்கும் வகையில் பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
