பயிற்சிப்பெற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் நிரந்தர நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமையவே திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 58 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர தலைமையில் இடம்பெற்றது. அத்தனகல்ல பிரதேச சபையின் தலைவர் பிரியந்த புஷ்பகுமாரவும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 58 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
படிக்க 0 நிமிடங்கள்