மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்
படிக்க 0 நிமிடங்கள்