20-20 உலககிண்ண தொடர் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையே தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென சச்சின் டென்டுல்கர் தெரிவித்துள்ளார். 7வது 20 – 20 உலககிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் போட்டியை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போட்டி நடத்தப்படுமா இல்லை என்பது தொடர்பில் அடுத்த மாதம் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென ஐ.சி.சி அறிவித்துள்ளது. போட்டி தொடர்பில் இந்திய கிரிக்கட் ஜாம்பவான் சச்சினிடம் வினவப்பட்ட நிலையில், இதில் தனக்கு முடிவு எடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் இன்றி நடத்தப்படும் போட்டியில் வீரர்களுக்கும் உற்சாகம் இருக்காது. ரசிகர்களே வீரர்களுக்கு உத்வேகத்தை வழங்குபவர்கள் என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
