மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:22

மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உதவி தோட்ட அதிகாரியொருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மதுபானம் களஞ்சியப்படுத்தப்பட்டு சூட்சுமமான முறையில் சந்தேகநபர் தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 7 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 26, 2019 15:22

Default