தடுப்புக் காவலில் இருக்கும் பெகோ சமனின் உதவியாளர் ஒருவர் துப்பாக்கியுடன் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் மனித படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் பொலிஸ்ப விசாரணைகளின் ஊடாக கைதாகியுள்ளனர்.
பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலனீ புலத்சிங்கள மாவத்தையில் முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பெலன்வத்த பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைதானார். அவரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
