மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 2 – 0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நேற்றைய தினம் 2வது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.
இதில் 5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றிபெற்றது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மழை குறுக்கிட்டதால், 44 ஓவர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 36 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஷெர்பான் ரதபோர்ட் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கட்டுக்களையும், அசித்த பெர்னான்டோ மற்றும் மஹீஸ் தீக்ஷன ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். 190 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து இலக்கையடைந்தது.
அணித்தலைவர் ச்சரித் அசலங்க ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களை குவித்தார். குறித்த வெற்றியின் ஊடாக 2 – 0 என இலங்கை தொடரை கைப்பற்றியுள்ளது. இறுதி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
