இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலை நாளைய தினம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாளைய தினம் முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா ஆயிரத்து 345 ரூபாவிற்கும், 400 கிராம் பால்மா 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.